தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை பாராயணம்

பசுமை நாயகன் Pasumai Nayaganஉலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

-பசுமை நாயகன் Pasumai Nayagan

கோவில்களின் நகரமான கும்பகோணத்தில் பழங்காலத்து ஆலயங்கள்

 
        படிக்கட்டுகளில்'ஏறி'கோவில்களுக்குள் செல்வது வழக்கம். ஆனால் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த பல கோவில்களுக்கு, படிக்கட்டுகளில் 'இறங்கி' செல்ல வேண்டியிருக்கிறது.
   கோவில்களின் நகரமான கும்பகோணத்தில் பழங்காலத்து ஆலயங்கள் சில படிப்படியாக மண்ணுக்குள் புதைந்து வருகின்றன. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவிலில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிய சிலைகள் உள்ளன.
    2004ஆம் ஆண்டு உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவில், யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறை ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கும் அளவிற்கு இந்தக் கோவில் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் கோவிலைச்சுற்றி அவ்வப்போது அமைக்கப்படும் தார் மற்றும் கான்கிரீன்ட் சாலைகளே என்கின்றனர் மக்கள்.
எட்டடி உயரத்தில் சாலைகள்
    மராத்திய மன்னர்களால் கட்டப்பட்ட சக்கரபாணி கோவிலின் தரை மட்டத்தைவிட, சுற்றுச் சாலைகள் 8 அடி உயர்த்தப் பட்டதால், கோவிலின் தெற்கு வாசல் முழுவதும் அடைபட்டுவிட்டது. ராஜ கோபுரத்தின் வழியாகவும் சிரமப்பட்டுதான் கோவிலுக்குள் செல்லவேண்டியிருக்கிறது.இதேபோல் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராமசுவாமி கோயிலில், பிரகார மட்டத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்படும் தளங்களால், தூண்களில் வடிவமைக்கப்பட்டிருந்த ஏராளமான சிலைகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
பாதுகாக்க நடவடிக்கை தேவை
   வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோவில்கள், மழைவெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் மக்கள் சென்று தங்கும் வகையில்தான் உயரமாகவும், பிரம்மாண்ட பிரகாரங்களோடும் அமைக்கப்பட்டன. அவற்றை நாம் பாதுகாக்கத் தவறியதால், மண்ணில் புதையுண்டு போகும் நிலை அரங்கேறி வருகிறது. அதனால், புதிய சாலைகளை அமைக்கும்போது அதன் மட்டத்தை உயர்த்தாமல், முதலில் அமைக்கப்பட்ட சாலைகளை அகற்றிவிட்டு அமைத்தால் மட்டுமே பழமையும் பெருமையும் வாய்ந்த கோவில்களை மண்மூடிவிடாமல் பாதுகாக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்


   வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், நிவாரணம் வழங்க கோரி தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  மேலும், காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  கருகிய பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், நீரின்றி தரிசாக விடப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும், வேலையிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

                                    -பசுமை நாயகன்


பஹ்ரைனில் தொடர் குண்டுவெடிப்பு தஞ்சாவூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பலி     ஹ்ரைன் நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் பலியானார். தலைநகர் மனாமாவை அடுத்த அடில்யா, குதைபியா மற்றும் ஹுரா பகுதிகளில் அடுத்தடுத்து 5 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய தூதரக அலுவலகம் அமைந்துள்ள குதைபியா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஆசியாவைச் சேர்ந்த இருவர் பலியாகினர். இதில் ஒருவர் இந்தியர்  என கூறப்பட்ட நிலையில் உயிரிழந்தது தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை திருநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் குதைபியா பகுதியில் 10 ஆண்டுகளாக கார் ஓட்டிவந்த திருநாவுக்கரசு, நேற்று கார் அருகே கிடந்த பையை காலால் தள்ளிவிட்டபோது, அதில் இருந்த குண்டு வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த திருநாவுக்கரசு 30 வயதே ஆனவர். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குண்டுவெடிப்பில் பலியான திருநாவுக்கரசுவின் உடலை, சொந்த ஊர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோலார் பம்ப்..! கலக்கும் விவசாயி..!!

                                                            THAGAVALTHALAM

சோலார் பம்ப்..! கலக்கும் விவசாயி..!!
(ஆலோசனை: +91 96885 32123)

கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம்.

''ஆம்... இது ஒன்றுதான் எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் போகிறது. இதுதான் உண்மை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார்... இந்த சூரியசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்துப் பாசனம் செய்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயகுமார்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் குளிர்காற்று சிலுசிலுக்க, தோட்ட எல்லையில் ரயில்கள் தடதடக்க, தென்னை மரங்கள் குடை பிடித்துக்கொண்டிருக்க, ரம்மியமாக இருக்கிறது விஜயகுமாரின் தென்னந்தோப்பு. களத்துமேட்டில், தான் அமைத்திருக்கும் சூரியசக்தி மின்சார உற்பத்தி அமைப்புகளை நம்மிடம் காட்டியவர், ''கரன்ட் தட்டுப்பாடை என்னால சமாளிக்க முடியல. அதனாலதான், சோலார் பவர் ஜெனரேட்டர் மூலமா, பம்ப்செட்டை இயக்க ஆரம்பிச்சுட்டேன்.

கோயம்புத்தூர்தான் என்னோட பூர்விகம். போன தலைமுறையில செல்வாக்கான விவசாயக் குடும்பம். ஆனா, நான் இன்ஜீனியரிங் படிச்சுட்டு, 40 வருஷமா மெஷினுக்குள்ளயே வாழ்ந்துட்டேன். ஆனாலும், மனசுக்குள்ள விவசாய ஆசை போகல. பொண்ணு, பையன் ரெண்டுபேரும் படிச்சு அமெரிக்காவுல செட்டிலாகி நல்லா சம்பாதிக்கறாங்க. 'இனி மெஷின் வாழ்க்கை போதும்’னு விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். கணிசமான பணம் கையில இருந்துச்சு. அதை வெச்சு, செழிப்பா இருக்குற இந்தத் தோப்பை வாங்கினேன்.

வருஷம் முச்சூடும் தண்ணீர் தளும்புற கிணறு. இருந்தாலும், சொட்டுநீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். காய்ப்புக்கெல்லாம் குறையில்ல. அதனால என்னோட விவசாய வாழ்க்கை சந்தோஷமாதான் போயிட்டிருந்திச்சு. ஆனா, கரன்ட் பிரச்னை வந்ததுக்கப்பறம் ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. கிணறு நிறைய தண்ணி இருந்தும் ஒழுங்கா பாசனம் பண்ண முடியாம, மரங்கள்லாம் காய ஆரம்பிச்சுச்சு. குரும்பையெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

'என்ன செய்றது’னு தீவிரமா யோசிச்சு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டேன். 'ஜெனரேட்டர் வாங்கலாம்’னு சிலர் யோசனை சொன்னாங்க. அதைப்பத்தி விசாரிச்சப்போ... 'அது, சாத்தியமே இல்லை. விவசாயத்தைக் காலி பண்ணிடும்’னு தெரிய வந்துச்சு. அதுக்கப்பறம்தான் 'சோலார் பம்ப்செட்’ பத்திக் கேள்விப்பட்டேன்.

உடனே, ஒரு கம்பெனியில விசாரிச்சேன். ஒருத்தரோட தோட்டத்துல சோலார் மூலமா இயங்குற பம்ப்செட்டை நேர்ல போய் பாத்தேன். 500 அடி ஆழ கிணத்துல இருந்து சோலார் மூலம் தண்ணீர் கொட்டுச்சு. அதைப் பாத்ததும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே, 5 ஹெச்.பி மோட்டாரை இயக்குற அளவுக்கு அரை சென்ட் நிலத்துல சோலர் பேனல்களை அமைச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் விஜயகுமார்..
சோலார் பம்ப்/ சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த 
    தகவல்தளம்                                                                                                  
                                                                                                        -பசுமை நாயகன்